Latestமலேசியா

பெர்சத்து துணைதலைவர் ஹம்சா, அஸ்மின் பொதுச் செயலாளர்; தேர்தலில் போட்டி இல்லாத ஏற்பாடு?

செலயாங், ஜலை 14 – எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள பெர்சத்து கட்சித் தேர்தலில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியின்றி ஹம்சா ஜைனுடினை (Hamzah Zainudin ) கொண்டு வருவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல் கசிந்துள்ளது.

அதற்கு வழிவிடும் வகையில் தற்போது துணைத்தலைவர் பதவி வகித்துவரும் அகமட் பைசால் அசுமு (Ahmad Faizal Azumu ) தனது பதவியிலிருந்து விலகி மூன்று உதவித் தலைவர்களில் ஒருவராக போட்டியிடுவார் என பெர்சத்துவின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் ( Mohyiddin Yassin ) தெரிவித்தார்.

தனது நடப்பு துணைத் தலைவர் பதவியை ஹைம்சா ஜைனுடிக்கு விட்டுக் கொடுப்பதற்கு அகமட் பைசால் முன்வந்துள்ளார்.

திறன் மற்றும் பரந்த அனுபவத்தின் அடிப்படையில் பெர்சத்து கட்சியின் தலைமைச் செயலாளராக அஸ்மின் அலி நியமிக்கப்படுவார் என்றும் முஹிடின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஹம்சா ஜைனுடின் பெர்சத்துவில் ஆற்றியுள்ள பங்கை கருத்திற் கொண்டு அவரை துணைத்தலைவர் பதவிக்கு நியமிக்கும் முடிவை தாமும் ஏற்றுக்கொள்வதாக பைசால் தெரிவித்திருக்கிறார்.

Ideal மாநாட்டு மையத்தில் பெர்சத்துவின் மாநாட்டிற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!