கோலாலம்பூர், அக்டோபர்-15 – பெர்சாத்து கட்சியில் முஸ்லீம் அல்லாதோருக்கான சாயாப் பெர்செக்குத்து (Sayap Bersekutu) பிரிவின் துணைத் தலைவராக டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் வெற்றிப் பெற்றுள்ளார்.
அக்டோபர் 12-ஆம் தேதி நடைபெற்ற மத்திய மற்றும் தொகுதி அளவிலான தேர்தலில், தஞ்சோங் தொகுதியைச் சேர்ந்த Cheah Kim Huat-டை அவர் தோற்கடித்தார் அப்பதவியை அடைந்துள்ளார்.
அப்பிரிவின் துணைத் தலைவராகத் தம்மைத் தேர்ந்தெடுத்த பேராளர்களுக்கு நன்றிக் கூறிய சஞ்சீவன், Sayap Bersekutu பிரிவை வலுப்படுத்துவதே தமது தலையாயக் கடமையாக இருக்குமென்றார்.
16-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி வெற்றிப் பெறுவதை உறுதிச் செய்ய, இப்போது தொடக்கம் உழைக்க வேண்டும்; குறிப்பாக இந்தியர்களிடம் பெர்சாத்து கட்சியைக் கொண்டுச் சேர்த்து, வாக்குகளைக் கவரப் போராடுவோம் என அவர் குறிப்பிட்டார்.
அதுவொரு பெரும் சவால் என்றாலும், இலக்கை நோக்கிப் பயணிக்கப் போவதாக சஞ்சீவன் கூறினார்.
இவ்வேளையில், Sayap Bersekutu-வின் தலைவர் பதவியை Dr Chong Fat Full மேலும் மூன்றாண்டுகளுக்குத் தற்காத்துக் கொண்டுள்ளார்.
அப்பிரிவின் நிரந்தர தலைவராக செல்வராஜன் சுப்பையாவும், நிரந்தர துணைத் தலைவராக சுப்ரமணியம் புருஷோத்தமாவும் போட்டியின்றி வெற்றிப் பெற்றனர்.
15 செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் 6 இந்தியர்கள் வெற்றிப் பெற்றனர்.
Sayap Bersekutu Bersatu பிரிவுக்கு நாடு முழுவதும் 26 தொகுதிகளில் 35,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.