Latestமலேசியா

பேக்கான் பாருவில் முதியவர் ஜெயகோபி கொலை; நான்கு நண்பர்கள் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

தெலுக் இந்தான், மே 7 – கடந்த மாதம் ஏப்ரல் 17 ஆம் தேதி, Hilir Perak மாவட்டத்தில் உள்ள Pekan Baruவில் 70 வயது முதியவர் ஜெயகோபியை கொன்ற சம்பவத்தில் இன்று 4 நண்பர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

தெலுக் இந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 25 வயது SRC Parkash Rao, MA Aligeswaran, T Tiagesan மற்றும் K Shanker, ஆகியோர் மீது இந்தக் கொலைக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

குற்றச்சாட்டுகளை மாஜிஸ்திரேட் Naidatul Athirah Azman முன்னிலையில் வாசித்தபோது புரிந்துகொண்டதாக தலையை அசைத்தனர்.
.
கொலை வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதால், எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

குற்றச்சாட்டுகளின்படி, இவர்கள் இன்னும் பிடிபடாமல் இருக்கும் நபருடன் சேர்ந்து 70 வயதான N. Jeyagobyயை கொன்றுள்ளனர்.

குற்றம் நிறுபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அதே சமயத்தில் குறைந்தபட்சம் 12 பிரம்படி விதிக்க சட்டம் வகை செய்கிறது.

அரசு தரப்பில. டி. பி. பி. வழக்கறிஞர் Nur Darwis Aghniya Halim Azizi ஆஜரானார்.

அதே நேரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் வழக்கறிஞரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!