பேங்கோக், ஜூலை-17 – தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் உள்ள சொகுசு ஹோட்டலில் 6 பேர் மர்மமான முறையில் இறந்துக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் சிலர் விஷம் கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுந்துள்ளது.
மரணமடைந்தவர்கள் அனைவரும் வியட்நாம் நாட்டவர்கள் என தெரிய வருகிறது.
எனினும் அமெரிக்கர் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
முன்னதாக அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் அவசர செய்தி வெளியிட்டன.
எனினும் அதனை மறுத்த போலீஸ், மேற்கொண்டு எதுவும் கருத்துரைக்கவில்லை.
அச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு தாய்லாந்துப் பிரதரும் உத்தரவிட்டுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் தாய்லாந்து சுற்றுலாத் துறையைப் பாதிக்கலாமென அவர் கவலைத் தெரிவித்தார்.