Latestமலேசியா

பேங்கோக் புத்தாக்க விருதுகளில் மலேசிய இந்திய மாணவர்கள் வெற்றி; ரமணன் பூரிப்பு

கோலாலம்பூர், மார்ச்-23-மலேசியாவைப் பெருமைப்படுத்தும் வகையில், நம் மாணவர்கள் நால்வர் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்ற புத்தாக்க விருதளிப்பில் சிறப்பாக சாதித்துள்ளனர்.

கெடா மாநிலத்தைச் சேர்ந்த இம்மாணவர்கள், ஆரம்பப் பள்ளி பொறியியல் பிரிவில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், இரண்டாம் இடத்தையும் வென்றனர்.

கோ. சாரங்கபாணி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த இளநேயன் யுவராஜன், தீர்ச்சனா முனியாண்டி மற்றும் சுல்தான் பட்லிஷா தேசிய இடைநிலைப் பள்ளியின் இளனருன் யுவராஜன், இளமாறன் முனியாண்டி ஆகியோரே அந்நால்வராவர்.

இவர்களின் சாதனையைப் பாராட்டிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், அவர்களை நேரில் அழைத்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வெற்றியின் மூலம் மலேசிய இளைஞர்களின் திறமை மற்றும் புத்தாக்க சிந்தனை உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆதரவு இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.

இது மலேசியாவுக்கு ஒரு பெருமையான தருணமாகும்…

இச்சாதனை, மேலும் பல இளம் மலேசியர்களை உலக அரங்கில் பிரகாசிக்கத் தூண்டும் என்றும் பி.கே.ஆர் உதவித் தலைவருமான ரமணன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!