Latestமலேசியா

விபத்திற்குப் பின் பஸ் ஓட்டுனரை இருவர் தாக்கிய காணொளி வைரல்; போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஏப்ரல் 4 – விரைவு பஸ் ஒன்று காரை மோதியதை தொடர்ந்து அக்காரில் இருந்த இருவர் பஸ் ஓட்டுனரை தாக்கிய சம்பவம் வைரலானதை தொடர்ந்து இரண்டு விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை பிற்பகல் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் 58.5 ஆவது கிலோமீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் மூன்று போலீஸ் புகார்கள் செய்ததாக குளுவாங் போலீஸ் தலைவர் பஹ்ரின் நோ ( Baharin Noh 3) தெரிவித்தார்.
தங்கள் கார் விபத்துக்குள்ளானதால் ஆத்திரமடைந்த இரு நபர்கள் பஸ் ஓட்டுனரை தாக்கியதால் அவர் காயம் அடைந்தததாக கூறப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் 324 ஆவது விதியின் கீழ் காயம் ஏற்படுத்தியது மற்றும் 1959ஆம் ஆண்டின் சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அலட்சியமாக வாகனம் ஓட்டியது தொடர்பில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பஸ் ஓட்டுநரை இரண்டு நபர்கள் தாக்குவதை காட்டும் டேஷ்போர்டு கேமராவின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதில் , பஸ் ஓட்டுநரின் கையில் காயங்கள் இருப்பதாக நம்பப்படும் ஒரு புகைப்படமும்  அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!