கோலாலம்பூர் , நவ 25 – சிலாங்கூர் காற்பந்து கிளப்பின் விளையாட்டாளர் Faisal Halim மீது எரி திராவகம் ஊற்றப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை புக்கிட் அமான் விசாரணைத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சிலாங்கூர் போலீஸ் துறையின் தலைவர் டத்தோ உசேய்ன் ஓமாரிடமிருந்து சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு பதில் கிடைத்துள்ளது. இன்று காலை சிலாங்கூர் சட்டமன்ற துணை சபாநாயகர் முகமட் கம்ரி கமாருடின் இதனைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் புக்கிட் அமான் போலீஸ் தீவிர கவனம் செலுத்தி வருவதோடு குற்றவியல் விசாரணைத்துறையின் சிறப்பு படை விசாரணையை நடத்தி வருதாக சிலாங்கூர் போலீஸ் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
எரி திராவகம் வீசப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கான நிபுணத்துவம் மற்றும் சிறந்த கருவிகளும் இருப்பதால் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்யமுடியும் என சிலாங்கூர் போலீஸ் தெரிவித்திருப்பதையும் முகமட் கம்ரி கூறினார். பைசாலுக்கு எதிரான விசாரண குறித்த அறிக்கைக்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் காத்திருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று ஊடகங்களில் தகவல் வெளியானது. இந்த விவகாரம் குறித்து போலீசிடமிருந்து எந்தவொரு தகவலையும் சிலங்கூர் அரசாங்கம் பெறவில்லையென மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவர் குழுவிற்கான ஆட்சிக் குழுத் தலைவரான Najwan Halimi தெரிவித்திருந்தார்.