பெட்டாலிங் ஜெயா, மே-20 – சிலாங்கூர் FC கால்பந்தாட்டக்காரர் Faisal Halim மீது எரிதிராவகம் வீசிய சந்தேக நபரின் முக வரைபடத்தை போலீஸ் வெளியிட்டுள்ளது.
அவன் 165 sentimeter உயரம் கொண்ட 30 வயது மதிக்கத்தக்க ஆடவன் என தேசியக் காவல் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
நடுத்தர அளவிலான உடல் எடையுடன் மாநிற தோலைக் கொண்டவன் என்றும் IGP சொன்னார்.
போலீஸ் வெளியிட்டுள்ள வரைபடத்தை போன்று யாரையாவது கண்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புக் கொண்டு விசாரணைக்கு உதவிடுமாறு அவர் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மே 5-ஆம் தேதி பேரங்காடியொன்றில் வைத்து Faisal Halim மீது எரிதிராவகம் வீசப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அத்தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது.
படுகாயம் அடைந்த Faisal மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.