
லோஜிஸ்டிக் எனப்படும் சரக்கு போக்குவரத்து வாகன தொழில்துறையை பாதிக்கும் விவகாரங்களில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கனரக வாகனங்கள் துறையில் சம்பந்தப்பட்ட முக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
உணவகங்கள், மருத்துவமனைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் துறைமுகங்கள் உட்பட பல இடங்களுக்கு சரக்குப் பொருட்களை கொண்டுச் செல்லும் கனரக வாகன தொழில்துறையினர் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகளக் களைய அரசாங்கம் குறிப்பாக போக்குவரத்து அமைச்சு மற்றும் அது தொடர்பான நிறுவனங்கள் அக்கரை செலுத்த வேண்டும் என Pulse எனப்படும் PERSATUAN USAHAWAN LOGISTIK SEMENANJUNG MALAYSIA வின் துணைத்தலைவர் ஜோஸ்வா ரவி இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழில் துறை நடத்துனர்களுக்கு அதிக பிரச்னைகள் இருக்கின்றன. போக்குவரத்து அமைச்சு மற்றும் அது தொடர்பான துறையுடன் நாங்கள் ஒத்துழைக்க தயாராய் இருக்கிறோம்.
ஆனால் தீர்க்க முடியாத பல விவகாரங்களுக்கு அமைச்சின் உதவி வேண்டும் என Persatuan Usahawan Logistik semanjung Malaysia அமைப்பின் தலைவர்
டாக்டர் புவனேஸ் தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சும், மலேசிய நெடுஞ்சாலை வாரியம் , புஸ்பாகோம் போன்ற தரப்பினர் எடுக்கும் சில முடிவுகள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்த கனரக வாகன தொழில்துறையை பெரிய அளவில் பாதிக்கின்றன.
எந்தவொரு முடிவும் எடுப்பதற்கு முன் எங்களுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும்.
கனரக போக்குவரத்து தொழில்துறை பொருளாதாரத்தின் முக்கிய அம்சங்களோடு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.
ஒரு தலைப்பட்சமாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதே போக்குவரத்து அமைச்சும் இதர அரசு துறைகளும் கவனம் செலுத்த வேண்டும் என மலேசிய டிரக்கிங் (Trucking) சங்கம், மலேசிய கொண்டெய்னர் லோரி சங்கம், மலேசிய டிப்பர் லோரி (Tipper lorry) நடத்துனர் சங்கம், மலேசிய மோபைல் கிரேன் (Mobile Crane) ஓட்டுனர் சங்கம், மற்றும் Persatuan Usahawan Logistik Semanjung Malaysia ஆகியவை இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக்கொண்டன.