கோலாலம்பூர், ஆகஸ்ட்-22, போதைப்பொருள் குறித்து பதின்ம வயதினர் நால்வர் பேசியதாகக் கூறப்படும் வீடியோவை போலீஸ் விசாரித்து வருகிறது.
வைரலான வீடியோ ஆராயப்பட்டு, தற்போது மேல் விசாரணை நடைபெறுவதாக புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ காவ் கோக் ச்சின் (Khaw Kok Chin) தெரிவித்தார்.
அந்த வீடியோவில் இருப்பதாகக் கூறப்படும் ஒருவர் மலாக்காவில் அது குறித்து போலீஸ் புகார் செய்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மற்றவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுவரென அவர் சொன்னார்.
நேரலையில் அவர்களின் பேச்சும், கையில் காட்டியப் பொருளும் போதைப்பொருள் எனக் கூறப்படுவதைச் சுற்றி விசாரணையின் கோணம் அமைகிறது.
வைரலான 53 வினாடிகள் வீடியோவில், அவர்களில் இருவர் பிளாஸ்டிக் பையில் போதைப்பொருளையும் ஒரு பிளாஸ்டிக் பாட்டிலையும் காட்டியதாகக் கூறப்பட்டது.
கிட்டத்தட்ட 20,000 views-கள் கடந்து 10,000 shares-களை அவ்வீடியோ தாண்டியுள்ளது.
வீடியோவைப் பார்த்த பலரும் அதிர்ச்சி தெரிவித்ததோடு, போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.