Latestஉலகம்

போயிங் விமானத்தின் இயந்திரத்திற்குள் மெக்கனிக் இழுக்கப்பட்டார் -ஈரானின் சாபஹார் விமான நிலையத்தில் பயங்கரம்

தெஹ்ரான், ஜூலை 11 – விமானத்தின் இயந்திரம் உள்ளே இழுத்துக் கொண்டதால் ஆடவர் ஒருவர் மரணைம் அடைந்த பயங்கரமான இரண்டவது சம்பவம் அண்மையில் ஈரானின் Chabahar Konarak விமான நிலையத்தில் நடந்துள்ளது. ஜூலை 3ஆம்தேதி மெக்கனிக் ஒருவர் போயிங் விமானத்தின் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட அந்த சம்பவத்தை பார்த்த பலர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். Vares Airlines சின் போயிங் 737 -500 ரக விமானத்திற்கு அருகே ஒரு கருவியை எடுக்க சென்றபோது மாதிரி பரிசோதனைக்காக இயக்கப்பட்டிருந்த அந்த விமானத்தின் இயந்திரத்திற்குள் Abolfazi Amiri என்ற அந்த மெக்கனிக் இழுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 3 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை மணி 7.15 அளவில் தெஹ்ரன் வந்துச் சேர்ந்த அந்த போயிங் விமானத்தின் பயணிகள் இறங்கியுள்ளனர். அந்த விமானத்தின் வலதுபுறப் பகுதியில் உள்ள இயந்திரம் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டிருந்தது. அந்த இயந்திரத்தின் மேற்பகுதி திறக்கப்பட்டிருந்ததோடு வழக்கம்போல் அதன் இயந்திர பகுதியை சுற்றிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

அப்போது இயந்திரத்திற்கு கருவி ஒன்றை எடுக்க மறந்துவிட்டதை உணர்ந்த மெக்கனிக் ஒருவர் மீண்டும் விமானத்திற்கு அருகே சென்றபோது அந்த இயந்திரம் தீப்பிடிப்பதற்கு முன் அவரது உடல் இயந்திரத்திற்குள் உள்ளே இழுத்துக் கொண்டது. திடீரென விமானத்தின் இயந்திர பகுதியில் காற்று உறிஞ்சும் பகுதியில் , அந்த போயிங் 737 இல் நிறுவப்பட்ட cfm 56-3 tuboprop இயந்திரத்தில் இழுக்கப்பட்டதால் இறந்த அந்த மெக்கனிக் உடலை தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்தனர். ஏற்கனவே கடந்த மே மாதம் Armsterdam மின் பிரதான விமான நிலையத்தில் பல பயணிகள் முன்னிலையில் நடந்த இதே போன்ற சம்பவத்தில் விமானத்தின் இயந்திரத்தினால் ஒருவர் இழுத்துச்செல்லப்பட்டதால் மரணம் அடைந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!