Latestமலேசியா

போராட்டத்தில் டாமி தாமஸின் மகள் பார்வையை இழக்க நேரிடும்

சிட்னி, ஜூன் 29 – ஆஸ்திரேலியா சிட்னியிலுள்ள ஒரு வணிக நிறுவனத்தின் வளாகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது போலீசாருடன் போராடியதில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக முன்னாள் தலைமை நீதிபதி ஜெனரல் டான் ஸ்ரீ டாமி தாமஸின் மகள் ஹன்னா தாமஸ் வலது கண் பார்வையை இழக்க நேரிடும் என்று உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸின் கிரேண்ட்லர் தொகுதியில் கிரீன்ஸ் கூட்டாட்சி தேர்தல் வேட்பாளராக முன்பு போட்டியிட்ட ஹன்னா, வெள்ளிக்கிழமை காலை பெல்மோரில் கைது செய்யப்பட்டபோது முகத்தில் பலத்த காயங்களுக்கு ஆளாகியுள்ளார்.

காவல்துறையினர் பிறப்பித்த போராட்ட நிறுத்த உத்தரவை மீறிய ஹன்னா உத்தரவை நிறைவேற்ற மறுத்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதான ஹன்னாவின் முகத்தில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பாங்க்ஸ்டவுன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வலது கண்ணைச் சுற்றி கடுமையான வீக்கத்தைக் காட்டும் ஹானாவின் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!