போட்டிக்சன், ஜூலை 12 – போர்ட்டிக்சனில் கிளிஞ்சல்கள் தயாரிப்பது மற்றும் அதனை எடுப்பதற்கான தடை இன்னமும் நீடிப்பதாக நெகிரி செம்பிலான் மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. போர்ட்டிக்சனிலுள்ள கிளிஞ்சல்களில் இன்னமும் alga Alexandrium மற்றும் biotoksin அளவு இன்னமும் நிலைத்தன்மையற்ற வகையில் இருப்பதால் இந்த நிலையில் கிளிஞ்சல்களை உண்பது உடல் நலத்திற்க பாதிப்பை ஏற்படுத்தும் என நெகிரி செம்பிலான் மீன்பிடித் துறையின் இயக்குனர் Kassim Tawe தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி முதல் அந்த கடல்வாழ் உணவு பொருளின் மாதிரி குறித்து 15முறை மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கூடத்தில் பரிசேதனை நடத்தியபோதிலும் இப்போதைக்கு போர்ட்டிக்சன் கிளிஞ்சல்களை உண்பது பாதுகாப்பானதாக இல்லையென அவர் நினைவுறுத்தினார்.