போர்ட் டிக்சன், ஜுலை 26 – ஐபோன் திருடிய ஆடவன் ஒருவனுக்கு, நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், இரண்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
27 வயது முஹமட் ரம்டான் அசாருடின் கமருடின் எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, 22 வயது நபர் ஒருவரின், ஐபோன் 13 Pro Max 5112GB ரக விவேக கைப்பேசியை திருடியதாக அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
புதிதாக ஐபோனை வாங்கிய அந்நபர், அதனை சோதனை செய்து பார்க்குமாறு அவ்வாடவனிடம் தந்துள்ளார்.
எனினும், அவன் அந்த ஐபோனை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டியதாக கூறப்படுகிறது.
ஜூலை 11-ஆம் தேதி, மாலை மணி 7.40 வாக்கில், லுகூட், கம்போங் ஸ்ரீ பாரிட்டிலுள்ள வீடொன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.