போர்ட் டிக்சன், ஜூலை 19 – நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில், கடந்த வாரம் ஆடவர் ஒருவர் மூழ்கி உயிரிழக்க காரணம் என நம்பப்படும் ஐந்து நண்பர்களுக்கு எதிராக இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டது.
எனினும், 36 வயது மஹாராஜ்(Maharaj), 34 வயது சண்முகசேர்வை (Shanmugaservai), 42 வயது பேசதுன் பிருஸ் அரிபின் (Faezatun Firus Arifin), 31 வயது பிரவீனா (Praveena ) மற்றும் 34 வயது சுவிப்ரா ( Suvipra )ஆகிய அந்த ஐவரும், தங்களுக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
பொறுப்பற்ற அல்லது கவனக்குறைவான செயலால், 38 வயது ஆடவரின் மரணத்திற்கு வித்திட்டதாக அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர். எனினும், அது கொலை குற்றமாக வகைப்படுத்தப்படாது.
ஜூலை 13-ஆம் தேதி, அதிகாலை மணி இரண்டு வாக்கில், தங்கும் விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஈராண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தலா நான்காயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அவர்களை இன்று ஜாமினில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.