Latestஅமெரிக்காஉலகம்

போர் மீண்டும் வெடிக்குமா? ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை; அமெரிக்கா மீண்டும் வான்வழித் தாக்குதல்

வாஷிங்டன், ஜூன்-28-Hormuz நீரிணையில் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் நாட்டுக்குள் இருக்கும் பல இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கா அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இதனால் மத்தியக் கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் மத்தியக் கட்டளையகம் CENTCOM வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு நிலையங்கள், வான் பாதுகாப்பு தளங்கள், கடலோர ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலின் தீவிரத்தை விவரிக்கும் பிரத்யேக வீடியோ காட்சிகளையும் CENTCOM தற்போது வெளியிட்டுள்ளது.

அனைத்துலகக் கப்பல் போக்குவரத்து பாதைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக வாஷிங்டன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கை அப்பகுதியில் நிலவி வந்த தற்காலிக அமைதியை சீர்குலைத்துள்ளது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை IRGC, வட்டாரத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!