Latestமலேசியா

போலி கடவுச்சீட்டு விற்பனையில் தலைவனாகச் செயல்பட்ட வங்களாதேச ஆடவன் சிக்கினான்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 29 –போலி கடவுச்சீட்டு ஆவணங்களை உருவாக்கும், ஐந்து வங்களாதேச ஆடவர்கள், நேற்று அதிரடியாக நடைபெற்ற சோதனையில் கைதாகினர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட உளவுச் சோதனையில், இந்த போலி கடவுச்சீட்டு தயாரிப்பின் தலைவனாகச் செயல்பட்டு வந்த 23 வயது ஆடவன் உட்பட நால்வர் கையும் களவுமாக பிடிபட்டனர்.

அச்சோதனையின் போது 26 வங்காளதேச நாட்டு கடவுச்சீட்டுகள், 2 இந்தோனேசிய நாட்டு கடவுச்சீட்டுகள், 1 மியான்மார் நாட்டு கடவுச்சீட்டு உட்பட மடிக்கணினி, அச்சுப்பொறி (printer) மற்றும் இணையத்தில் பணம் செலுத்திய ரசீதுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கடவுச்சீட்டு இல்லாத வெளிநாட்டவர்களுக்கு Fomema நிறுவனத்தின் ஆவணங்களைப் பெறுவதற்கான சேவைகளை வழங்குவதே இந்த கும்பலின் செயல்பாடாகும்.

இதற்கு 500 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன் பின்னர், தபால் வழி அல்லது அவர்களை நேரடியாகச் சந்தித்து இந்த போலி கடவுச்சீட்டுகளை விநியோகம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, இவர்கள் நான்கு மாதங்களாகச் செயல்பட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!