புத்ராஜெயா, மே 30 – சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மோத்தா மற்றும் இதர சமூக ஊடக நிறுவனங்களுடனான சந்திப்பின் போது, போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராடும் மடானி அரசாங்கத்தின் கடப்பாடு குறித்து தொடர்பு அமைச்சு விவாதிக்கும்.
ஜூன் மாதத்தின் மத்திய வாக்கில், சிங்கப்பூருக்கான தனது அதிகாரப்பூர்வ பயணத்தின் போது, அந்த சந்திப்பு நடத்தப்படுமென தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சில் கூறியுள்ளார்.
சிறார்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதே நமது முதன்மை கடப்பாடு.
அதற்கு, வாட்ஸ்அப் உட்பட முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற மேத்தாவின் சமூக ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் என பாஹ்மி நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னதாக, உற்பத்தி திறனை அதிகரிக்க, தொடர்பு அமைச்சின் பணியாளர்கள் AI செயற்கை நுண்ணறிவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென பாஹ்மி வலியுறுத்தினார்.