Latestமலேசியா

போலி பணக் கோரிக்கை; பயிற்சி நிலையத்தின் மூன்று அதிகாரிகள் கைது

ஷா அலாம், மே 20 – மொத்தம் 36,000 ரிங்கிட் போலி பணக் கோரிக்கையை அங்கீகரித்தது தொடர்பில் தொழில் திறன் பயிற்சி நிலையத்தின் மூன்று அதிகாரிகளை MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. MACC அலுவலகத்திற்கு வாக்குமூலம் வழங்க முன்வந்தபோது நேற்று மாலை மணி 4.10அளவில் 40 முதல் 50 வயதுடைய இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்மணியும் கைது செய்யப்பட்டதாக MACC க்கு நெருக்கமான தகவல்கள் கூறின.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து சந்தேகப் பேர்வழிகளையும் தடுத்து வைப்பதற்கு MACC செய்து கொண்ட மனுவை ஷா அலாம் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி Sasha Diana Sabtu அனுமதித்தார். அந்த சந்தேக நபர்களில் ஒருவர் தொழில் திறன் பயிற்சி நிலையத்தின் கூட்டுறவு கழக தலைவர் ஆவார். இதற்கு முன் தடுத்துவைக்கப்பட்ட நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களைத் தொடர்ந்து தற்போது விசாரணைக்காக அந்த மூவரும் கைது செய்யப்பட்டனர் என கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!