
கோலாலம்பூர், ஜூன் 26 – கோலாலம்பூரில் Jalan Hang Lekiuவிலுள்ள கிங்ஸ்டன் ஹோட்டலுக்கு (Kingston Hotel) முன்னால் போலீஸ் காரை சேதப்படுத்தியதாக, வீடற்ற வெளிநாட்டவர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
உடல்நலக் பிரச்னைகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அந்த நபர், செங்கல் என்று நம்பப்படும் ஒரு பொருளை போலீஸ் வாகனத்தின் மீது வீசி சேதத்தை ஏற்படுத்தியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintenden நுசுலான் முகமட் டின் (Nuzulan Mohd Din) கூறினார்.
விசாரணைக்கு உதவும் வகையில், அந்த ஆடவர் வியாழன் முதல் சனிக்கிழமை வரை மூன்று நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தண்டனைச் சட்டத்தின் 427 ஆவது பிரிவு மற்றும் 1959/63-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(c)- பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் நுசுலான் குறிப்பிட்டார்.



