ஈப்போ, ஆகஸ்ட் -24 – பேராக், ஈப்போவில் விசாரணைக் கைதிகளை ஏற்றியிருந்த போலீஸ் வாகனத்துக்கு பாதுகாப்பாகச் (escort) சென்ற போலீஸ் ரோந்து கார், மற்றொரு காரால் மோதப்பட்டு சேதமடைந்தது.
அச்சம்பவம் வியாழக்கிழமை காலை Jalan Sultan Azlan Shah சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.
Siren ஒலி எழுப்பியவாறு வந்து கொண்டிருந்த போலீஸ் ரோந்து காருக்கு, Perodua Kelisa வழிவிட்டு நிற்காமல் போனதே அவ்விபத்துக்குக் காரணமென கண்டறியப்பட்டது.
அதில் அந்த Honda Civic ரோந்து காரை ஓட்டி வந்த போலீஸ்காரர் இடது கைமுட்டியில் காயமடைந்தார்.
உடனிருந்த போலீஸ்காரருக்கு காயமேதும் இல்லை.
காரின் முன்பகுதியும் கடுமையாகச் சேதமுற்றது.
போலீஸ் ரோந்து காரை மோதிய Perodua Kelisa காருக்கும் சேதங்கள் ஏற்பட்டன; ஆனால் அதன் ஓட்டுநருக்கு காயமேற்படவில்லை.
இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பவில்லை; விசாரணை இன்னும் தொடருவதாக ஈப்போ போலீஸ் கூறியது.
அவ்விபத்து, கார் dashcam-மில் பதிவாகி 9 வினாடி வீடியோவாக முன்னதாக வைரலானது.