புத்ரா ஜெயா, ஆக 1 – ஏழு ஆண்டுகளுக்கு முன் தனது கணவர் சேகர் (Segar) போலீஸ் லோக்காப்பில் மரணம் அடைந்தது தொடர்பில் புதிய விசாரணை நடத்தி அவரது மணத்திற்கு பொறுப்பானவர்களை தண்டிக்கும்படி விமாலா தேவி (Vimala Devy) அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். தனது கணவர் மரணம் அடைந்தபோது போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்த லோக்காப்பில் இருந்துள்ளார். எனவே அவரை தாக்கியவர்களை அடையாளம் காண்பதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சனையும் இருக்காது என விமலாதேவி தெரிவித்துள்ளார்.
போலீஸ் காவலில் இருந்தபோது தனது கணவருக்கு பாதுகாப்பை உறுதி செய்வதில் போலீஸ் அலட்சியமாக இருந்துள்ளதை இரண்டு நிதிமன்றங்கள் கண்டறிந்துள்ளதையும் விமலா தேவி சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னதாக சேகரின் மரணம் தொடர்பான மரண விசாரணையின் முடிவு குறித்து அரசு தரப்பு செய்திருந்த முறையீட்டை நீதிபதி ஸைடி இப்ராஹிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு கொண்ட மேல் முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த முடிவைத் தொடர்ந்து சேகர் மரணம் தொடர்பாக விமலா தேவியும் அவரது மகன் துஷாந்தரன் (Thusataran) தொடுத்திருந்த அலட்சியம் மீதான இழப்பீட்டு வழக்கு மனுவுக்கு சாதகமாக 9 லட்சம் ரிங்கிட் இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஏற்கனவே சிராம்பான் உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவு தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பினால் வேலையில்லாத சேகரின் மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளுக்கும் ஆதரவாக அவர்களுக்கான இழப்பீட்டு தொகையை 30 நாட்களுக்குள் அரசாங்கம் வழங்க வேண்டும் என அவர்களது வழக்கறிஞர்கள் ஹரேஸ் ( Haresh ) மற்றும் ரம்ஷானி இட்ரிஸ்
( Ramzani Idris ) கேட்டுக்கொண்டனர்.