Latestமலேசியா

மணிக்கு RM400 – RM900 கட்டணம்; உடம்புப்பிடி சேவை என்ற போர்வையில் ஒழுங்கீனம்; 2 கும்பல்கள் முறியடிப்பு

புத்ராஜெயா, ஜூலை 27 – உடம்புபிடி சேவை என்ற போர்வையில் செயல்பட்டு வந்த 2 வெளிநாட்டு விபச்சார கும்பல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன.

பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 2 வாரங்களாக உளவுப் பார்த்த குடிநுழைவுத் துறை, நெகிரி செம்பிலான், சிரம்பானிலும், சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாஙானிலும் அதிரடிச் சோதனைகளை நடத்திய போது அக்கும்பல்கள் சிக்கின.

அம்மையங்களின் பாதுகாவலர்களாகச் செயல்பட்டு வந்த உள்ளூர் ஆடவர்கள், வியட்நாம், வங்காளதேசம், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த விலைமாதர்கள், இடைத்தரகர்கள் என மொத்தமாக 117 பேர் கைதாகினர்.

ஒரு மணி நேரத்திற்கு 400 ரிங்கிட் முதல் 900 ரிங்கிட் வரையிலான கட்டணத்தில் வெளிநாட்டுப் பெண்களின் ‘உடம்புப்பிடி சேவை’ என்ற போர்வையில் அங்கு ஒழுங்கீன நடவடிக்கைகள் அரங்கேறி வந்துள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டது.

பணத்தை ரொக்கமாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ செலுத்தியப் பிறகு, வாடிக்கையாளர்களிடம் அப்பெண்கள் ஒப்படைக்கப்பட்டு வந்துள்ளனர்.

கைதான அனைவரும், குடிநுழைவுச் சட்டம், கடப்பிதழ் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!