Latestஇந்தியா

மதுபோதையில் காதலனின் மனைவியைத் தவறாகப் பேசிய கள்ளக் காதலி; கோபத்தில் அடித்துக் கொன்ற காதலன்

சென்னை, மார்ச்-5-தமிழகம், சென்னையில் திருமணமான ஆடவருக்கும் அவரின் கள்ளக் காதலிக்கும் மதுபோதையில் ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்தது.

35 வயது சுரேஷ், தனது 50 வயது கள்ளக் காதலி ராதாவை கொலைச் செய்தார்.

இருவருமே மதுபோதையில் இருந்தபோது, ராதா, சுரேஷின் மனைவியை கேலியும் கிண்டலும் செய்ததாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றி சுரேஷ்க்கு கோபம் தலைக்கேறியதால், ராதாவின் தலையைப் பிடித்து சுவரில் மோதியதுடன், பீர் பாட்டிலால் தாக்கினார்.

படுகாயம் அடைந்த ராதா இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சுரேஷ் தப்பியோடிய நிலையில், பின்னர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டு குற்றத்தையும் ஒப்புக்கொண்டார்.

இச்சம்பவம் வைரலாகி, கள்ளக் காதலியிடம் கட்டிய மனைவியை விட்டுக் கொடுக்காத கணவன் என சிலர் ‘புகழ்ந்தாலும்’, திருமணத்தை மீறி கள்ள உறவில் இருப்பது மனைவிக்கு செய்யும் பச்சை துரோகம் என சுரேஷை வெளுத்து வாங்குகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!