கோத்தா பாரு, செப்டம்பர்-26, மனைவியை இஸ்திரிப் பெட்டியால் காயப்படுத்தியதாக, கிளந்தான்,கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 35 வயது ஆடவர் இன்று குற்றம் சாட்டப்பட்டார்.
எனினும், Mohd Nurhakiman Mohd Nasir அதனை மறுத்து விசாரனைக் கோரினார்.
செப்டம்பர் 23-ஆம் தேதி இரவு 7.30 மணி வாக்கில் கம்போங் ரம்புத்தான் ரெண்டாங்கில் உள்ள வீட்டில் அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
குற்றம் சாட்டப்பட்டவரும் மனைவியும் இன்னமும் ஒரே வீட்டில் தங்கியிருப்பதால், பாதுகாப்புக் கருதி அவ்வாடவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.
அக்டோபர் 29-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருகின்றது.