
கோலாலம்பூர், ஆக. 10: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்போது மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி பரிசோதனைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதனை பிரதமரின் மூத்த பத்திரிகைச் செயலாளர் துங்கு நஷ்ருல் அபைடா இன்று வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகளைத் தொடர்ந்து, பிரதமர் அன்வார் சுமார் இரண்டு நாட்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், பிரதமர் மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனை அல்லது நடைமுறைகளின் தன்மை குறித்து அந்த அறிக்கையில் மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.
பிரதமரின் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்தும் சுமுகமாக நடைபெற்று, அவர் தொடர்ந்து நல்ல உடல்நலத்துடன் விரைவில் வழக்கமான பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம் என்றும் துங்கு நஷ்ருல் அபைடா கேட்டுக்கொண்டார்.



