Latestஉலகம்

மருத்துவ அவசரத்தின் போது பாலியல் தாக்குதல்; மீட்பு பணியாளர் மீது தாய்லாந்து நடிகை குற்றச்சாட்டு

பேங்கோக், ஏப்ரல்-4-தாய்லாந்தில், பிரபல நடிகை மீது மீட்பு பணியாளர் ஒருவர் பாலியல் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

30 வயதான நடிகை குலசாத்திரி மிச்சால்ஸ்கி (Gulasatree Michlsky) மார்ச் 31-ஆம் தேதி உடல்நலக் குறைவுக் காரணமாக தனது குடியிருப்பில் இருந்தபோது, மருத்துவ உதவிக்காக காத்திருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.

விடியற்காலை 2 மணிக்கு தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்த மீட்பு பணியாளர், தான் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தவறாக நடந்துகொண்டதாக குலாசாத்ரி போலீஸ் புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, 43 வயது சந்தேக நபரை போலீஸார் நேற்று கைதுச் செய்தனர்.

அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அவருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகை இந்த வழக்கில் முழுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!