Latestமலேசியா

மறு சுழற்சி மையத்தில் குடிநுழைவு துறை அதிரடி சோதனை; 49 வெளிநாட்டவர்கள், 1 மலேசியப் பெண் கைது

கிள்ளான், 1 ஆகஸ்ட் – மலேசிய குடிநுழைவு துறை (JIM) கிள்ளானில் உள்ள மறு சுழற்சி மையம் ஒன்றில் நடத்திய அதிரடி சோதனையில் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட உளவு நடவடிக்கைக்குப் பிறகு, நேற்று மதியம் 2.51 மணியளவில், அந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவு துறை தலைமை இயக்குநர் டத்தோ ருஸ்லின் ஜுசோக் (Datuk Ruslin Jusoh) கூறினார்.

தற்காலிக வேலை அனுமதிப் பாஸ் (PLKS) பயன்படுத்தி வேறு இடங்களில் வேலை பார்த்தது, அனுமதிக் காலத்தை மீறித் தங்கியது, பயண ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இருந்தது போன்ற குற்றங்களுக்காக 49 வெளிநாட்டவர்களும் நிலத்தின் உரிமையாளரான மலேசியப் பெண் ஒருவரும் இந்த அதிரடி சோதனையில் கைதானது குறிப்பிடத்தக்கது.

மலேசியக் குடியுரிமை சட்டம் 1959/63, பாஸ்போர்ட் சட்டம் 1966 மற்றும் குடியுரிமை விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும், மேல் விசாரணைக்காக மலாக்காவில் உள்ள மாகாப் உம்போ குடியுரிமை நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!