
அலோர் காஜா, ஜனவரி-20 – ஜோகூர், பாகோவில் உள்ள UTHM வளாகத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பும் வழியில் 19 வயது பல்கலைக்கழக மாணவர் ஒருவர், காட்டுப் பன்றியால் முட்டப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு மலாக்கா அலோர் காஜா, பாடாங் கெளாடி அருகே நிகழ்ந்தது.
காட்டுப் பன்றி முட்டியதில் மாணவரின் பற்கள் உடைந்து, ஈறுகள் கிழிந்தன.
அவர் தற்போது மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
சம்பவத்தின் போது அப்பகுதி இருட்டாக இருந்ததாகவும், விளக்குகள் இல்லாததால் ஏற்கனவே அங்கு விபத்துகள் நடந்துள்ளதாகவும் கூறி, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாணவரின் குடும்பத்தார் வலியுறுத்தினர்.
போலீஸார் இதுவரை அதிகாரப்பூர்வப் புகார் எதனையும் பெறவில்லை.
வனத்துறையான PERHILITAN சம்பவத்தை விசாரிக்கிறது.



