வாஷிங்டன், ஏப்ரல் 6 – அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களான New Jersey மற்றும் New York-யை வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவைக் கருவியில் 4.8-டாக பதிவாகிய நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.
மேற்கு Manhattan நகரில் நிலம் அதிர்ந்ததில், New York முழுவதும் அதனை உணர முடிந்ததாக மாநில ஆளுநர் Kathy Hochul கூறினார்.
நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாகவும், பாதிப்பு அல்லது சேதம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
அடுத்த வாரத்தில் மீண்டும் ரிக்டர் அளவில் 5-தாக பதிவாகும் நில அதிர்வுகள் ஏற்பட 3% வாய்ப்பு உள்ளது.
எனவே, நிலநடுக்கத்திற்கு பிந்தைய சாத்திய அதிர்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த நிலநடுக்கத்தை மாநிலம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக Kathy கூறினார்.
பொருட்சேதம் அல்லது உயிருடச்சேதம் குறித்து உடனடி தகவலேதும் இல்லை.