
மலாக்கா, ஜூன்-15-மலாக்காவில் உள்ள பிரபல தொழிற்சாலை ஒன்று, ஆரம்ப சம்பளமாக 3,500 ரிங்கிட் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஹோட்டல் முன்பாக நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பத்து பெரண்டாமில் உள்ள ஒரு மின்னியல் தொழிற்சாலை, _operator_ மற்றும் _techncian_ பணிகளுக்கான நேர்காணலை மலாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடத்தியது.
3,500 ரிங்கிட் என்ற கவரச்சிகரமான ஆரம்ப சம்பளம் காரணமாக, மலாக்கா மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அதிகாலை முதலே அங்கு குவியத் தொடங்கினர்.
இதனால், ஹோட்டலுக்கு வெளியே கிலோ மீட்டர் கணக்கில் நீண்ட வரிசை உருவானது.
இது குறித்து விளக்கமளித்த மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Ngwe Hee Sem, மலாக்காவில் வேலையில்லா திண்டாட்டம் வெறும் 2 விழுக்காடு மட்டுமே உள்ளதாகவும், இந்த கூட்டம் அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் காரணமாகவே கூடியது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, மலாக்கா முதல்வர் Ab Rauf Yusoh ஏற்பாட்டில் அங்கு வரிசையில் நின்றிருந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் வசதியை உறுதிச் செய்ய மலாக்கா மேயர் Shadan Othman நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.



