
மலாக்கா, ஜனவரி-9,
மலாக்கா ராயாவில் உள்ள கராவோக்கே மையமொன்றில் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஏற்பட்ட சண்டையில் 6 பேர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர்.
குடிபோதையில் இருந்தபோது, பாடல் தேர்வில் ஏற்பட்ட வாக்குவாதமே சண்டைக்கு காரணமாகியுள்ளது.
சம்பவ இடத்தில் போலி துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆனால் எந்த துப்பாக்கிச் சூடும் நிகழவில்லை.
சமூக ஊடகங்களில் பரவிய துப்பாக்கிச் சூடு குறித்த தகவல்கள் பொய்யானவை எனவும், அங்கு எந்த குண்டு உறைகளும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் போலீஸ் கூறியது.
இதுவரை 12 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சுடும் ஆயுதச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் கலவரம் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலி ஆயுதங்களை வைத்திருப்பதும் கடுமையான குற்றமாக கருதப்படும் என போலீஸார் இவ்வேளையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



