Latestமலேசியா

மலாக்கா பாடாங் தெமுவில் அஸ்தி கரைப்பதோ அல்லது ஈமச் சடங்கையோ செய்யக்கூடாது என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை அகற்றப்பட்டது – டத்தோ ஷண்முகம்

மலாக்கா, செப் 6 – மலாக்கா பாடாங் தெமு பகுதியில் உள்ள கடலோரப் பகுதியில் அஸ்தி கரைப்பதோ அல்லது ஈமச் சடங்கையோ செய்யக்கூடாது என வைக்கப்பட்ட நோட்டிஸ் பலகையால் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அதனை உடனடியாக அகற்ற உத்தரவிடப்பட்டு அது அகற்றப்படதாக வணக்கம் மலேசியாவிடம் கூறியுள்ளார் மலாக்கா மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் அரசு சாரா இயங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஷண்முகம்.

இந்த அறிவிப்புப் பலகை இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்திருக்கிறது. எனவே இது நியாயமா என முன்னதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் போடப்பட்டிருந்தன.

இது மலாக்கா பாடாங் தெமு அருகே உள்ள ஒரு 8 residence எனும் ஆடம்பர வீடுடமைப்பு பகுதிக்கு அருகில்தான் இந்த கடரோரப் பகுதி அமைந்திருக்கிறது. பிரச்சனை என்னவென்றால் ஈமச்சடங்கை செய்பவர்கள் அந்த சடங்கிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களை அப்படியே அங்கேயே போட்டு விட்டு போய் விடுகின்றனர். இதனால் அங்கு குப்பை மேடாக இருக்கிறது. இதனால் அந்த வீடமைப்பு பகுதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து அதிகமான புகார்கள் கிடைத்தன. இதனால்தான் மலாக்கா மாநகர் மன்றம் உடனடி நடவடிக்கையாக அப்பலகையை வைத்ததாக ஷண்முகம் விளக்கமளித்தார்.

ஆனால் இச்செயல் இந்துக்களின் மனதை புண்படுத்தியிருப்பதை அவர்கள் உணரவில்லை. எனக்கு தகவல் தெரிந்து உடனே நான் அதை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து அப்பலகை அகற்றப்பட்டுவிட்டது என ஷண்முகம் கூறினார்.

இப்பிரச்சனைக்கு நீண்ட கால தீர்வாக ஈமச்சடங்கு மற்றும் அஸ்தி கரைக்கும் சடங்குகளுக்காக மாற்று இடத்தை அடையாளம் காணும் நடவடிக்கையை தான் மேற்கொண்டிருப்பதாகவும், இடம் அடையாளம் காணப்பட்டவுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஷண்முகம், அதுவரை பாடாங் தெமு பகுதியை இந்துக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், ஆனால் சுத்தத்தை பேணுமாறு அவர் கேட்டு கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!