
மணிலா, நவம்பர்-15,மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்த போதிலும், புதிய மாநில அரசாங்கத்துடன் மத்திய அரசாங்கம் தொடர்ந்து ஒத்துழைக்கும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்களின் நலனுக்கும் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிலிப்பின்ஸ் சென்றுள்ள பிரதமர், அறிக்கை வாயிலாக அவ்வாறு கூறினார்.
இதனிடையே, மலாக்கா மாநிலத் தேர்தல் முடிவுகள், மலாய்க்காரர்களின் ஒற்றுமைக்கு மக்கள் வழங்கியுள்ள ஆதரவைப் பிரதிபலிப்பதாக பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் வருணித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளின் வெற்றி, மலாய் முஸ்லீம்களின் ஒற்றுமை மீதான மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில், பாரிசான் நேஷனல் 21 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 3 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
பக்காத்தான் ஹராப்பான் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூப் யூசோ மலாக்கா முதலமைச்சராகத் தொடர இணக்கம் காணப்பட்டுள்ளது.



