Latestமலேசியா

‘பொய்ச் செய்திகள் மலிந்து கிடப்பதால்’ சமூக ஊடகக் கணக்குகளை மூடும் டோனி ஃபெர்னாண்டஸ்

கோலாலம்பூர், அக்டோபர்-25 – AirAsia நிறுவனரும் Capital A நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான தான் ஸ்ரீ தோனி ஃபெர்னாண்டஸ், ‘பொய்யான செய்திகளும் மோசடிகளும் அதிகமாக இருப்பதால்’ தனது சமூக ஊடக கணக்குகளை மூடுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே தனது Threads கணக்கை மூடியுள்ளதாகவும், விரைவில் Facebook மற்றும் Instagram-மை மூடப்போவதாகவும், Facebook-கில் வெளியிட்ட பதிவில் அவர் கூறினார்.

இத்தகைய மோசடிகளையும் பொய்ச் செய்திகளையும் தடுக்க அதிகமான தொழில்நுட்பம் இருந்தும், Facebook, Instagram, Threads ஆகியவற்றின் தாய் நிறுவனமான Meta அவற்றை
தடுக்கவில்லை என்றும் தோனி விமர்சித்தார்.

என்ற போதிலும், சமூக ஊடகங்களிலிருந்து விலகும் தமது முடிவு எதிர்மறை கருத்துக்களால் அல்ல என அவர் தெளிவுப்படுத்தினார்.

உண்மையில் எதிர்மறை கருத்துகள் தம்மை மேம்படுத்த ஊக்குவிப்பதாக பெர்னாண்டஸ் கூறினார்.

தற்போது தனது வாழ்க்கையின் ‘இறுதி கட்டத்தில்’ இருப்பதாகவும் எனவே ‘முக்கியமான விஷயங்களுக்கு’ கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கமான CEO-க்களைப் போல் அல்லாமல் இணையத்தில் trend ஆகும் விஷயங்களில் ஆர்வத்துடன் பங்குகொண்டு சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக வலம் வருபவரான தோனி பெர்னாண்டஸின் இந்த முடிவு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!