Latestமலேசியா

மலேசியாவின் கடன் வாங்கும் தரத்தை JP Morgan முதலீட்டு நிறுவனம் உயர்த்தியுள்ளது

கோலாலம்பூர், ஜூலை 11 – மலேசியாவின் கடன் வாங்கும் தரத்தை நடுநிலையாகவும் கொள்கை சீரமைப்புகளுக்கு ஏற்பவும் JP முதலீட்டு நிறுவனம் உயர்த்தியுள்ளது என அதன் ஆசிய -பசிபிக் தலைவர் ராஜீவ் பத்ரா (Rajiv Batra ) தெரிவித்திருக்கிறார்.

மலேசியா விரைவான முன்னேற்றத்தையும் உள்நாடு மொத்த உற்பத்தி 4.2 விழுக்காடு கவர்ச்சிகரமான வளர்ச்சியையும் கொண்டிருப்பதை CNBCக்கு வழங்கிய பேட்டியில் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜே .பி. மோர்கன், நாட்டின் கொள்கைச் சீர்திருத்தங்கள், தரவு மைய முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு உருவாக்கம் ஆகியவற்றைப் பாராட்டி, ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவின் மதிப்பீட்டை குறைந்த நிலையிலிருந்து நடுநிலைக்கு மேம்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

எங்களுக்கு மிகவும் உற்சாகமான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டு அனைத்து அறிகுறிகளும் ஆக்கப்பூர்வமாக இருந்ததோடு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, முன்னேற்றமும் வேகமாக இருந்தது . நகர்ப்புற வளர்ச்சி கிட்டத்தட்ட 10 முதல் 11 விழுக்காடு வரையிலான மதிப்பெண்களைக் காட்டுவது மிகப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

நாங்கள் நாட்டிற்கு கடன் வழங்க வேண்டும், எனவே எங்கள் மதிப்பீட்டை நடுநிலைக்கு மேம்படுத்தினோம் என்று அவர் கூறினார். நிர்வாகத்தின் உதவித் தொகையை குறைத்ததன் மூலம் அதன் சேமிப்பு பொருளாதாரத்திற்கு குறிப்பாக தொழிலாளர்கள் தொழில் திறன்கள் பெறுவதற்கும் உற்பத்தி பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும் என
அவர் கூறினார்.

வசதி குறைந்தவர்களுக்கான ரொக்க உதவி வழங்குவது உட்பட பொருளாதாரத்திற்கு புத்துயீருட்டும் நடவடிக்கைகள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்கான ஆக்கப்பூர்வமான வியூகங்களும் எடுக்கப்பட்டதோடு இது வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் கவர்ந்ததையும் ராஜீவ் பத்ரா சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!