கோலாலம்பூர், ஆகஸ்ட்-29 – இந்தியாவைத் தளமாகக் கொண்ட நிறுவனமொன்று, மலேசியாவின் முதல் AI பூங்காவையும் AI திரைப்பட நகரையும் அமைக்கவிருக்கிறது.
அந்நோக்கத்திற்காக 100 கோடி டாலரை Immerso AI-IP நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக, இலக்கயியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
பிரதமரின் அண்மைய இந்தியப் பயணத்தின் போது புது டெல்லியில் பல்வேறு தொழிலதிபர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் பலனாக, மலேசியாவின் முதல் AI பூங்காக உருவாகிறது.
Eros Investments குழுமத்தின் கிளை நிறுவனமான Immerso AI-IP-யின் அந்த பெரும் முதலீட்டின் வாயிலாக, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சுமார் 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
அந்த AI பூங்கா, ஒரு AI பல்கலைக்கழகத்தையும் AI தரவு மையத்தையும் உள்ளடக்குமென, கோபிந்த் கூறினார்.
AI திரைப்பட ஸ்டூடியோ மற்றும் AI திரைப்பட நகரை நிர்மாணிப்பதன் வாயிலாக, transmedia மற்றும் டிஜிட்டல் தயாரிப்புகளில் உள்ளூர் திறமைகளின் திறங்களை மேம்படுத்த வாய்ப்பேற்படுமென்றார் அவர்.
புது டெல்லி பயணம், புதிய வாய்ப்புகளைத் திறந்துள்ளது;
இப்புதிய முதலீட்டை பெரிதும் எதிர்பார்த்திருப்பதாகக் கூறிய கோபிந்த், இது மலேசியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேலும் உந்தச் செய்யுமென்றார்.