Latestமலேசியா

மலேசியாவில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர் – மனிதவள அமைச்சு

கோலாலம்பூர், ஜூலை 18 – இந்த ஆண்டு மே 31ஆம் தேதி வரை  2.3 மில்லியனுக்கும் அதிகமான  வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மலேசியாவில் இருப்பதாக  நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தொழில்துறை, கட்டுமானம், சேவை, தோட்டம், விவசாயம், வீட்டு வேலை , சுரங்கம் மற்றும் கல்லுடைப்பு ஆகிய துறைகளில்  23லட்சத்து 7,746 வெளிநாட்டு   தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.

தொழில்துறை துறையில்தான்  அதிக எண்ணிக்கையிலான அதாவது  730,999  வெளிநாட்டு தொழிலாளர்கள்  வேலை செய்கின்றனர்.  கட்டுமானத்துறையில் 646,508 பேரும் , சேவைத்துறையில் 394,739 பேரும்  தோட்டத்துறையில் 263,151 பேரும் , விவசாயத்துறையில் 171,103 பேரும் வேலை செய்கின்றனர். மேலும் வீட்டு  பணிப்பெண்களாக 100,675 பேரும்  சுரங்கம் மற்றும் குவாரி  துறையில்  571 பேரும் வேலை செய்கின்றனர். 

குடிநுழைவுத்துறையின் வெளிநாட்டு சேவைகள் பிரிவின் கீழ் 19,934 நிறுவனங்கள் ஜூலை 11 ஆம் தேதி வரை பதிவு செய்துள்ளன. உற்பத்தித்துறையில் அதிகபட்சமாக 27,012 விண்ணப்பங்களும் ,கட்டுமானத் துறையில் 8,981 விண்ணப்பங்களும் , வணிகச் சேவைகளில் 8,590 விண்ணப்பங்களும்,  கல்வித்துறையில் 7,142 விண்ணப்பங்களும்  கிடைக்கப்பெற்றதாக  மனித வள அமைச்சு எழுத்துப்பூர்வமாக  வழங்கிய பதிலில்  தெரிவித்துள்ளது.  

நாட்டிலுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களின்  தற்போதைய எண்ணிக்கை மற்றும்  அவர்கள் வேலை செய்துவரும் துறைகளின் விவரங்கள் குறித்து பக்காத்தான் ஹராப்பான்   Beruas   நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர்  டத்தோ ஙே கூ ஹாம் ( Ngeh Koo Ham ) எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோத  மனித வள அமைச்சு இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!