Latestமலேசியா

மலேசியாவும், சீனாவும், பல்வேறு துறைகளை உட்படுத்திய 14 உடன்படிக்கைகளில் கையெழுத்து

கோலாலம்பூர், ஜூன் 18 – இலக்கவியல் பொருளாதாரம், பசுமை தொழில்நுட்ப மேம்பாடு, சுற்றுலா உட்பட பல்வேறு துறைகளை உட்படுத்திய 14, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மலேசியாவும், சீனாவும் கையெழுத்திட்டுள்ளன.

நேற்று தொடங்கி மலேசியாவுக்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் சீனப் பிரதமர் லீ கியாங்கிற்கும், பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது, அந்த உடன்படிக்கைகள் கையெழுத்திடப்பட்டன.

மித்தி எனப்படும் முதலீட்டு, வர்த்தக மற்றும் தொழிலியல் அமைச்சு, நிதியமைச்சு, விவசாயம், உணவு பாதுகாப்பு அமைச்சு, வீடமைப்ப்ய் ஊராட்சி அமைச்சு, உள்துறை அமைச்சு, தொழில்நுட்ப புத்தாக்க அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சு என ஒன்பது அமைச்சுகள் அந்த உடன்படிக்கை கையெழுத்தாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

அதில் குறிப்பாக, மூன்று உடன்படிக்கைகள், மித்தி எனப்படும் முதலீட்டு, வர்த்தக, தொழிலியல் அமைச்சை உட்படுத்தி இருந்தன. இலக்கியல் பொருளாதாரம் மீதான உடன்படிக்கையும் அதில் அடங்கும்.

இரு உடன்படிக்கைகளில் தொடர்புத் துறை அமைச்சு கையெழுத்திட்ட வேளை ;நிதி அமைச்சின் கீழ் ஒரு உடன்படிக்கையும், வீடமைப்பு ஊராட்சி அமைச்சின் கீழ் ஒரு உடன்படிக்கையும், அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சின் கீழ் ஒரு உடன்படிக்கையும், விவசாயம் உணவு பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு உடன்படிக்கையும் கையெழுத்தாகின.

உள்துறை அமைச்சு, சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சும் தலா ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

முன்னதாக, சீன பிரதமருடன், அன்வார் இருவழி இரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, இருவழி உறவு ஆகியவை குறித்து அந்த கூட்டத்தின் போது முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக, மலேசியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக சீனா திகழ்கிறது.

கடந்தாண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தக மதிப்பு, 45 ஆயிரத்து 84 கோடியாக பதிவுச் செய்யப்பட்டது. அது மலேசியாவின் மொத்த உலக வாணிபத்தில் 17.1 விழுக்காடாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!