சென்னை, ஏப்ரல் 26 – மலேசியா ஊடாக கம்போடியாவில் இருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 35 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கேன் வகைப் போதைப் பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.
வியாழன்று கோலாலம்பூரில் இருந்து Air Asia விமானத்தில் வந்திறங்கிய பயணி ஒருவரின் நடவடிக்கை மீது சந்தேகம் கொண்டு விமான நிலைய அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.
அப்போது, தனது பேக்கில் 35 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் அடங்கிய பொட்டலத்தை அவர் மறைத்து வைந்திருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்நபர் தடுத்து வைக்கப்பட்டு மேற்கொண்டு விசாரணைகள் நடைபெறுகின்றன.
ஒரு நாளுக்கு முன்னர் தான் இதே சென்னை விமான நிலையத்தில் 28 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அவ்விரு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கின்றதா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.