கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – ஆட்டிசம் குறைப்பாடு இருந்தால் சாதிக்க முடியாதா என்ன?
இதனை நிருபித்துக் காட்டிய சகாப்தங்கள் உள்ளனர் உலகம் முழுவதும்.
அந்த பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் 10 வயது மலேசிய ஓவியர், ராஜேந்திர வர்மா.
இந்தச் சிறு வயதிலேயே அதிக ஓவியக்கலை கண்காட்சிகள், அதாவது 6 கண்காட்சிளைப் படைத்துள்ள ஓவியர் என்ற அடிப்படையில் மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார் இவர்.
இவரின் சாதனையை அங்கீகரித்து, மலேசிய சாதனை புத்தகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ராஜேந்திர வர்மாவிற்கு அத்கற்கான சாதனை சான்றிதழை நேற்று வழங்கினர்.
சிறு வயது முதலே வரைதலில் ஆர்வம் கொண்டிருந்த ஆட்டிசம் சிறுவனான ராஜேந்திர வர்மாவிற்கு, பெற்றோர்களின் உந்துதலே பெரும் துணை.
தனது வரைக்கலை வழி பலரின் மனங்கவர்ந்து, இச்சாதனையைப் படைத்துள்ள ராஜேந்திர வர்மா உண்மையிலேயே வியக்கவைப்பதாக, பத்து நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் புகழாரம் சூட்டினார்.
3 வயதிலேயே வர்மாவின் குறைபாட்டைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சைகளை எடுக்க ஆரம்பித்து விட்டோம்.
அவரின் தனித்திறனைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டோம்.
அதுவே இன்று ராஜேந்திர வர்மா இந்த சாதனையைக் கையில் எந்த ஒரு ஊக்குவித்தது என்றார் தாய் ராஜேஸ்வரி பரமசிவம்.
Interview
ஆட்டிசம் குழந்தைகளின் தனித்திறனைக் கண்டறிந்து, அதற்கான தகுந்த பயிற்சி கொடுத்து பொறுமையாகவும், விழிப்புணர்வோடும் வளர்த்தால், எந்த குழந்தையையும் சாதனை குழந்தைகளாக உருமாற்ற முடியும் என்கிறார் ராஜேந்திர வர்மாவின் தந்தையும் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான மோகனன் பெருமாள்.
10 வயதில் மலேசியச் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த ராஜேந்திர வர்மாவின் சாதனை, பல ஆட்டிசம் குழந்தைகளுக்குத் தன்முனைப்பாக இருப்பது, பெருமைமிக்க ஒரு விஷயம்.
இவரின் கலைப் பயணத்தில் மேலும் பல வெற்றிகளையும் குவிக்க வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.