Latestமலேசியா

மலேசியா திருமண நிகழ்ச்சி நிபுணர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 400 திருமண வல்லுநர்களை ஒன்றிணைத்த கருத்தரங்கு

கோலாலம்பூர், ஜூலை 19 – ஒரு திருமணம் என்றாலே, பத்திரிக்கை அச்சடிப்பவர்கள் தொடங்கி, மணமக்களுக்கு முக ஒப்பனை செய்பவர்கள், புகைப்படம் காணொளி எடுப்பவர்கள், மண்டபம் அலங்காரங்கள் செய்பவர்கள் என்று பல கிளை துறைகள் சார்ந்தவர்கள் வலம் வருகின்றனர்.

அந்த அளவுக்கு இந்தியத் திருமணத் துறை மிகப் பெரிய வர்த்தகத் துறையாக மாறியிருக்கிறது.

இந்நிலையில், மலேசியா முழுவதிலும் இத்துறையில் திருமண நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து வரும் பல வல்லுநர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் கருத்தரங்கு ஒன்றை WPAM எனும் மலேசியா திருமண நிகழ்ச்சி நிபுணர்கள் சங்கம் இன்று ஏற்பாடுச் செய்திருந்தது.

இரு பிரிவுகளாக நடைபெறும் இக்கருத்தரங்கில் குறிப்பாக முக ஒப்பனை மற்றும் திருமண புகைப்படம் காணொளி எடுப்பதைக் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக WPAMன் தலைவர் Veatha Kumar Rajagopal தெரிவித்தார்.

மலேசியாவில் செயல்படும் நிபுணர்கள் மட்டுமின்றி இந்தியாவிலிருந்தும் திருமண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பலர், இன்றைய நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.

ஒவ்வொரு கலைஞர்களுக்கும் இருக்கும் தனித்தன்மையான திறமைகளை, ஒருவருக்கு ஒருவர் அறிந்து கொள்ளும் வகையிலும், அவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் மேம்படுத்தவும் இன்றைய நிகழ்ச்சி வழிவகுத்துள்ளதாகக் கலந்து கொண்டவர்கள், வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.

இதனிடையே, இன்று இரவு ஏறக்குறைய 700 பேர் கலந்து கொள்ளும் விருந்து உபசரிப்பு ஒன்றும் திருமண நிபுணர்களுக்கு ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.

அதில், 20 ஆண்டுகளுக்கு மேற்பட்டு திருமணங்களை ஒருங்கிணைத்து வரும் 40 நிபுணர்களுக்கு இன்று விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளதையும் அதன் ஒருங்கிணைப்பாளர் Ruvanesh Arvin கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!