கோலாலம்பூர், மே 21 – மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பணிப்பெண் ஒருவர் Tokyoவில் ஓய்வில் இருந்தபோது தமது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தார். Norzana Hanim Hamzah மரணம் அடைந்ததை Malaysia Airlines வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியது. அவரது விமானம் Narita அனைத்துலக விமான நிலையம் சென்றடைந்த பின் Tokyo வில் Norzana ஓய்வில் இருந்தார். வேலைக்கு திரும்புவதற்காக கோலாலம்பூர் திரும்பும் விமானத்தில் புறப்படுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். Norzana வின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என Malaysia Airlines தெரிவித்தது.
Related Articles
Check Also
Close