கோலாலம்பூர், ஜூலை 31 – குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களான PMKS உயரந்த நிலைக்கு நகரத் தொடங்கியுள்ளன.
2023ஆம் ஆண்டில் குறு நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலில், 2023-யில் 1.1 மில்லியன் நிறுவனங்கள் அல்லது 96.9 சதவீத வணிகங்கள் செயல்பட்டு வருவதாக தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறையின் அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கை (Datuk Ewon Benedick) கூறினார்.
இந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி செயல்திறன், மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித்திறன் ஆகிய பொருளாதார குறிகாட்டிகளில் பங்களிப்பை வழங்கியுள்ளதை சுட்டிக்காட்டினார் அமைச்சர் டத்தோ எவோன் பெனடிக்கை (Datuk Ewon Benedick).
நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரிக்கவுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 2025ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அதிக ஒதுக்கீடு வழங்கப்பட்டும் என்று தான் நம்புவதாக எவோன் இன்று தெரிவித்திருக்கிறார்.