
மலேசிய மருத்துவர்களை வேலைக்கெடுக்க கோலாலம்பூரில் நேர்முகத் தேர்வை நடத்தும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் நடவடிக்கையை மலேசிய அரசாங்கம் சீரிய கவனமுடன் பார்க்க வேண்டும் என செனட்டர் Dr லிங்கேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இதை மலேசிய அரசாங்கம் அலட்சியப்படுத்திவிட்டால், மலேசிய மருத்துவர்கள் குறிப்பாக இளம் மருத்துவர்கள் வெளிநாடு புலம்பெயர்வதை மேலும் எளிதாக்கி விடும் என லிங்கேஷ் எச்சரித்துள்ளார்.
ஆண்டுக்கு 385,000 ரிங்கிட் சம்பள பேக்கேஜ், தங்குமிட வசதி மற்றும் இன்னபிற சலுகைகளை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்குகிறது.
இதில் மேலும் ஆச்சரியம் என்னவென்றால், தகுதி நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளன; இப்போது அனைத்து மலேசிய மருத்துவ பட்டதாரிகளும் முன்புபோல தகுதித் தேர்வில் அமரத் தேவையில்லை.
எனவே,
பினாங்கு சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் என்ற வகையில், இது நீண்ட கால பிரச்னை என்பதை தாம் அறிவதாகவும், எனினும் மடானி அரசாங்கத்தின் கீழ் இதில் மறுசீரமைப்பை மேற்கொள்ள இதுவே சரியான தருணம் என்றும் அவர் சொன்னார்.
ஏராளமான மருத்துவப் பணியாளர்கள் இந்த அரசாங்கம் தங்களின் மனக்கவலைகளைப் பரிவோடு புரிந்துகொள்ளும் என நம்புகின்றனர்.
ஆனால் அரசாங்கத்தின் அந்த பரிவு உண்மையில் செயலில் இருக்க வேண்டும்.
2025 வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்ட on-call அலவன்ஸ் தொகை என்னவானது என்பது குறித்து இதுவரை தகவலில்லை.
ஜூலை ஆன பின்பும் ஒரு நடவடிக்கையும் இல்லையென்றால் மருத்துவர்கள், நாட்டின் சுகாதார முறையை எப்படி நம்புவார்கள் என்று லிங்கேஷ் கேள்வி எழுப்பினார்.
பினாங்கு RCSI & UCD பட்டதாரிகளில் 40 விழுக்காட்டினர் மலேசிய அரசாங்க மருத்துவமனைகளுக்கு பதிலாக, அயர்லாந்து மற்றும் பிரிட்டனில் பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்துள்ளதே அதற்கு முக்கிய சான்றாகும்.
ஏற்கனவே 2019 முதல் 2023 வரை 6,400 மருத்துவப் பணியாளர்கள் வேலையை விட்டுச் சென்று விட்டார்கள்.
எனவே, ஒட்டுமொத்த அளவில் நாட்டின் சுகாதாரத் துறையை நாம் மறுசீரமைக்கா விட்டல், மேலும் ஏராளமான தரம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களை நாம் ஜிஇழக்க வேண்டி வரும்.
சீர்திருத்தங்கள் விரைவுப்படுத்தப்பட வேண்டும்; மாறாக ஆறப் போடப்படக்கூடாது என Dr லிங்கேஷ்வரன் சுட்டிக் காட்டினார்.