புத்ராஜெயா, ஜூலை-15, தேசிய ஸ்வாஷ் சகாப்தம் நிக்கோல் டேவிட், மலேசிய Heriot-Wat பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக ( Pro-Cancellor) நியமிக்கப்பட்டுள்ளார்.
நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது அவருக்கு முறைப்படி அப்பொறுப்பு வழங்கப்பட்டது.
தான் ஸ்ரீ ஜெமிலா மஹ்மூட்டுக்குப் (Tan Sri Jemilah Mahmood) பிறகு அப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராகும் இரண்டாவது பெண்ணாக 40 வயது நிக்கோல் பெயர் பதித்துள்ளார்.
இணை வேந்தர் என்ற முறையில் Heriot-Wat மலேசியக் கிளையின் கெளரவத் தலைவராக நிக்கோல் பணியாற்றுவதோடு, பட்டதாரிகளுக்கு பட்டங்களை எடுத்து வழங்குவது மற்றும் சடங்குப்பூர்வ நிகழ்வுகளில் Heriot-Watt-டின் தூதராகவும் பிரதிநிதியாகவும் செயல்படுவார்.
தாம் இணை வேந்தராகியிருப்பது, மேலும் அதிகமான விளையாட்டாளர்கள் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு வர ஊக்குவிப்பாக அமையுமென 8 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றவரான நிக்கோல் நம்பிக்கைத் தெரிவித்தார்.