Latestமலேசியா

மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வில் மயிரிலையில் உயிர் தப்பிய காளிதாஸ், தெய்வீக அழைப்பால் இஸ்லாம் மதத்தை தழுவினார்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – கடந்த வெள்ளிக்கிழமை நாட்டையே உலுக்கிய சம்பவம் மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வும்,
அதில் காணாமல் போன இந்திய மாது விஜயலெட்சுமிதான்.

இந்நிலையில், மற்றுமொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.

விஜயலெட்சுமி திடிரென ஏற்பட்ட குழியில் விழுந்தபோது, அவருடன் சேர்ந்து அருகில் அமர்ந்திருந்த ஆடவரும் விழ நேரிட்டது.

ஆனால் அவர் மயிரிலையில் உயிர் தப்பினார்.

அவர் காளிதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது இஸ்லாம் மதத்தை தழுவி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நில அமிழ்வு சம்பவம்தான் என்னை இஸ்லாம் மதத்தை தழுவ வைத்தது என கூறி அந்த நபர் தானாக முன்வந்து இஸ்லாமிய அதிகாரிகளைச் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்து அதன் பின்னர் இஸ்லாத்தை தழுவியதாக ABIM எனப்படும் மலேசிய இளைஞர் இஸ்லாமிய இயக்கத்தின் தலைவர் அகமட் பாமி தெரிவித்துள்ளார்.

இஸ்லாத்தை தழுவும் எண்ணம் ஏற்கனவே இருந்ததாகவும், இந்த நில அமிழ்வு சம்பவம் தனக்கு ஒரு “wake up call” அதாவது தெய்வீக அழைப்பாக இருந்ததாக அந்த ஆடவர் கூறியிருப்பதாகவும் தெரிகிறது.

காளிதாஸ் எனும் இயற்பெயரை கொண்ட அந்த ஆடவர், தற்போது ஹரிடத் (Haridath) என பெயர் மாற்றம் கண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!