
புத்ராஜெயா, அக்டோபர் 16 –
தேசிய ஒருமைப்பாடு அமைச்சு (KPN) மற்றும் துங்கு அப்துல் ரஹ்மான் அறக்கட்டளை (YTAR) இணைந்து, உயர்கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில் “Closing The Gap (CTG)” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் நாட்டின் திறமையான மேல்நிலைப் பள்ளி மாணவர்களை பல்கலைக்கழகப் பயணத்திற்குத் தயார்படுத்தி, விமர்சன சிந்தனை மற்றும் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2017 முதல், CTG Scholar திட்டம் மூலம் 121 பள்ளிகளில் இருந்து 651 மாணவர்கள் பங்கேற்று, 23 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான உதவித்தொகைகள் ‘Stanford’ பல்கலைக்கழகம், மலாயா பல்கலைகழகம் மற்றும் சன்வே போன்ற பல்கலைக்கழகங்களில் பெறப்பட்டுள்ளன.
மேலும், “Cikgu CTG” எனும் ஆறு மாதப் பயிற்சி திட்டம் மூலம் ஜொகூர், சபா, சரவாக் மாநிலங்களில் இருந்து 39 ஆசிரியர்கள் பயிற்சியடைந்து, 900க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளனர்.
2025 ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் குடும்ப வருவாய் குறைந்த, படிவம் 4 முதல் படிவம் 6 வரையுள்ள மாணவர்கள் இதில் பதிவுச் செய்ய தொடங்கலாம். அதே வேளை, பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில்முனைவோர்கள் இதில் வழிகாட்டிகளாக (Mentor) இணையலாம்.