Latestமலேசியா

மானியங்கள் அகற்றப்படவில்லை; மேலும் ஆக்ககரமாக நிர்வகிக்கப்படுகின்றன – பிரதமர்

புத்ராஜெயா, ஜூன்-17 – சிலர் கூறுவது போல் அரசாங்கம் மானியங்களை அகற்றவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மாறாக, உதவித் தொகை மேலாண்மை மேலும் ஆக்ககரமாக இருப்பதை உறுதிச் செய்யும் நடவடிக்கையிலேயே அரசு இறங்கியிருப்பதாக பிரதமர் சொன்னார்.

அரசாங்க மானியங்கள் இலக்கு வைக்கப்பட்ட மக்களுக்குப் போய் சேருவதே முக்கியம் என்றார் அவர்.

தீபகற்பத்தில் டீசல் மானியங்களுக்காக மட்டும் அரசாங்கம் இன்னமும் 7 பில்லியன் ரிங்கிட் நிதிச் சுமையை சுமக்கிறது.

ஆகவே உதவித்தொகை அகற்றப்பட்டு விட்டதாகக் கூறுவது சரியல்ல என பிரதமர் சொன்னார்.

உதவித் தொகை விரயம் இனியும் தொடரக் கூடாது.

அதே சமயம் இலக்கு வைக்கப்பட்ட மானிய முறையின் கீழ் மிச்சமாகும் பணம் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக மக்களுக்கே மீண்டும் போய் சேர வேண்டும் என்பதே மடானி அரசின் கொள்கை என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!