
கோலாலம்பூர், செப் 25 –
மலேசியர்கள் இப்போது Budi Madani RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னுக்கி குறைக்கப்பட்ட விலையில் RON95 எரிபொருளுக்கான தகுதியைச் இன்று முதல், அதிகாரப்பூர்வ Budi Madani அகப்பக்கத்தில் சரிபார்க்கலாம் என்று நிதி அமைச்சு இன்ஸ்டாகிராம் ( Instagram) பதிவில் தெரிவித்துள்ளது.
வலைத்தளத்திற்கு வந்ததும், பயனர்கள் தங்கள் தகுதியைக் கண்டறிய அவர்கள் MyKad எண்ணை மட்டுமே உள்ளிட வேண்டும்.
இந்த முயற்சியின் கீழ், போலீஸ் படை மற்றும் ஆயுதப்படை உறுப்பினர்கள் செப்டம்பர் 27 முதலும் அதே நேரத்தில் Sumbangan Tunai Rahmah (STR) உதவியைப் பெறுபவர்கள் செப்டம்பர் 28 முதலும் Ron 95 எரிபொருளை வாங்குவதற்கான தகுதியை பெறுவார்கள்.
மற்ற அனைத்து மலேசியர்களும் செப்டம்பர் 30 முதல் குறைக்கப்பட்ட விலையில் எரிபொருளை வாங்க முடியும்.
16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்கள் செயலில் உள்ள ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மாதத்திற்கு 300 லிட்டர் வரை RON95 பெட்ரோல் வாங்க உரிமை உண்டு.